ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி ஆவர். இவரின் நிறுவனத்தின் மீது உள்ள கடன் சுமை தொடர்பான விவரங்கள் வெளியானது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது மொத்தம் ரூபாய் 57,382 கோடியாகும். இதில் புதிதாக தொடங்கப்பட்ட நிர்வாக சீரமைப்பு பணிகளுக்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கோரிய கடன் ரூபாய் ரூபாய் 49,233 கோடியாகும். இந்நிறுவனத்துக்கு கடனுதவி அளித்த சீன மேம்பாட்டு வங்கி, எக்ஸிம் பேங்க் ஆப் சீனா உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 15,053 கோடியை தர வேண்டும்.ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது நிறுவன சீரமைப்பு திட்டம், அதாவது திவால் மசோதா நடைமுறை சட்டத்தின் கீழ் உள்ளது.
அதே போல் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தர வேண்டிய கடன் பொறுப்புகள் குறித்த விவரங்கள் வெளியானது. அதில் எஸ்பிஐ வங்கிக்கு ரூபாய் 4825 கோடியும், எல்ஐசி நிறுவனத்திற்கு ரூபாய் 4758 கோடியும், பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூபாய் 2531 கோடியும், சிண்டிகேட் வங்கிக்கு ரூபாய் 1225 கோடியும், பஞ்சாப் நேஷ்னல் வங்கிக்கு ரூபாய் 1126 கோடியும், ஐடிபிஐ வங்கிக்கு ரூபாய் 1410 கோடியும் ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டும். கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நான்காம் காலாண்டில் ரூபாய் 7767 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. இருப்பினும் முந்தைய ஆண்டை காட்டிலும் குறைவான நஷ்டத்தையே சந்தித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானி, தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.