சீன நிறுவனமான ரெட்மி, இந்தியாவில் தனது நிறுவனத்தின் ரெட்மி 7, ஒய்3 ஆகிய இரு ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏப்ரல் 29-ம் தேதி முதல் ரெட்மி இணையதளம் மற்றும் விற்பனையகங்களில் விற்பனைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ரெட்மி 7 வகை ஃபோன் பின் பக்க கேமரா- 12 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் மற்றும் செல்ஃபி கேமரா - 8 மெகா பிக்சல் (செயற்கை நுண்ணறிவு வசதியோடு) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரேம் 2 ஜிபி, 32 ஜிபி வரை ஸ்டோரேஜ் வசதி, 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மெமரி கார்டு வசதி 512 ஜிபி என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் ஆரம்ப விலை ரூ.7,999. மேலும் தண்ணீர் உட்புகாத தன்மை கொண்டதாக இந்த ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெட்மி ஒய்3 மாடல் ஃபோன், பின் பக்க கேமரா- 12 மெகா பிக்சல், 2 மெகா பிக்சல் மற்றும் செல்ஃபி கேமரா - 32 மெகா பிக்சல் (செயற்கை நுண்ணறிவு வசதியோடு) கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி ஒய்3 மாடலில் 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரண்டு வகையில் வெளிவந்துள்ளது. 3 ஜிபி ரேம் ஃபோனில் 32 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகவும், 4 ஜிபி ரேம் ஃபோனில் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டதாகவும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் மெமரி கார்டு வசதி 512 ஜிபி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபோனும் தண்ணீர் உட்புகாத தன்மை வசதி உடையது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.9,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.