Published on 20/12/2018 | Edited on 20/12/2018
நாட்டின் உட்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவரும் ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனம் தன் நிறுவனத்தின் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நிதி சிக்கல் இந்திய பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இதனை சமாளிக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி தொகையை கேட்டது. ஆனால் அந்த விவகாரம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இப்போது நிலவிவரும் நிதி நெருக்கடியை சீராக்க, வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அரசு கடன் பத்திரங்களை பங்குச்சந்தையில் வாங்க உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.