Skip to main content

31 வங்கி சாரா நிதி நிறுவனங்களின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் ரத்து - ஆர்பிஐ

Published on 10/11/2018 | Edited on 10/11/2018

 

 

 

rr

 

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் 31 நிதி நிறுவனங்களின் பதிவு சான்றிதழை ஆர்பிஐ கடந்த 9-ஆம் தேதி ரத்து செய்துள்ளது. 31 நிறுவனங்களில் 27 நிறுவனங்கள் வங்காளத்தை சார்ந்தது. இந்த 27 நிறுவனங்களின் உரிமத்தையும் பதிவு சான்றிதழையும் ஆர்பிஐ ரத்து செய்துள்ளது. மேலும் மீதமுள்ள 4 நிறுவனங்கள் உத்தர்பிரதேசம் மாநிலத்தை சார்ந்தது. 

சார்ந்த செய்திகள்

Next Story

கையும் களவுமாக சிக்கிய சார் பதிவாளர்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
The sub registrar was caught Anti-bribery department in action

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன் (வயது 65). இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாக இன்று (01.03.2024) திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள். இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த 27 ஆம் தேதி (27.02.2024) திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரி ராஜன் (வயது 41) என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார்.

அதற்கு திருவெறும்பூர் சார் பதிவாளர் சபரி ராஜன் ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கு 20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபால கிருஷ்ணன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபால கிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரி ராஜன் தனிநபர் சூர்யா (வயது 24) என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார்.