பாஜக நடத்திய பேரணி வன்முறையில் முடிந்த சம்பவம் கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மேற்குவங்க அரசைக் கண்டித்து புதிய தலைமைச் செயலகம் நோக்கி பாரதிய ஜனதா கட்சி பேரணி ஒன்றை அறிவித்திருந்தது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினர் பலர் கலந்து கொண்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்துப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இருந்த போதிலும் தடுப்புகளை மீறி பாஜகவினர் பேரணியை நடத்தியதால் காவலர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளு மோதலில் முடிந்தது. இறுதியில் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டு பாஜகவினர் கலைக்கப்பட்டனர். இருப்பினும் ஏற்பட்ட வன்முறையில் காவல்துறை வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது. தடையை மீறி பேரணியை ஏற்பாடு செய்த நந்திகிராம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுவேந்து அதிகாரி, எம்பி லாகித் சட்டர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுப்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.