மகராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள துலே பகுதிகளில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசும்போது, "கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையாவது நடத்தி இருக்கிறாரா? நான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறேன், பேசுகிறேன். ஆனால் பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் எதனை முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்? பிரதமர் மோடி திருடர் மட்டுமல்ல, கோழையும் கூட. எப்போதும் மோடி பொய் மட்டுமே பேசுகிறார். உங்களுக்கு உண்மையைக் கேட்க வேண்டுமென்றால், இங்கே வாருங்கள். பொய்களைக் கேட்கவேண்டுமென்றால், நரேந்திர மோடியின் கூட்டங்களுக்குச் செல்லுங்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு உங்கள் பணத்தை எடுக்கவே நீங்கள் வங்கியில் வரிசையில் காத்திருந்தீர்கள். நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா போன்ற எந்த பணக்காரராவது, தொழிலதிபர்களாவது வங்கி வாசலில் காத்திருந்தார்களா?" என பேசினார்.