Skip to main content

ராகுல் கைலாஷ் யாத்திரை புகைப்படம் போலி பாஜக விமர்சனம்..? பாஜகவிற்கு சவால் விட்ட காங்கிரஸ்..?

Published on 08/09/2018 | Edited on 08/09/2018

 

 Congress challenged the BJP

 

கைலாஷ் யாத்திரையில் ராகுல் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என பாஜக கூறிய விமர்சனத்திற்கு காங்கிரஸ் கட்சி அவர் பயணவிவரங்கள் மற்றும் சக பயணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. 

 

கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று கைலாஷ் மானசரோவாருக்கு புனித யாத்திரிக்கைகாக நேபாளம் காத்மாண்டுவுக்குச் சென்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவர் அங்குள்ள வூட்டு என்னும் ஹோட்டலில் தங்கினார். அப்போது அவர் மாமிசம் சாப்பிட்டதாக உள்ளூர் செய்திகள் வெளிவந்து சர்ச்சையை கிளப்பின. இதன் பின்னர், அந்த ஹோட்டல் நிறுவனமே அவர் சைவ உணவுதான் ஆர்டர் செய்து சாப்பிட்டார்  என கூறியது.

 

ராகுல் காந்தி மானசரோவாரில் இருக்கும் ஏரியின் புகைப்படத்தை எடுத்து, அதனுடன் “மானசரோவார் ஏரியின் நீர் மென்மையானது, சலனமற்றது, அமைதியானது. ஏரி நமக்கு பலவற்றை தந்தாலும் அது ஒன்றையும் இழப்பதில்லை. யார் வேண்டுமானாலும் அந்த நீரை பருகலாம். எந்தவித வெறுப்பும் இங்கில்லை. இதனால்தான் இந்தியாவில் அனைவரும் இந்த நீரை வழிபடுகிறோம்” என்று பதிவு செய்திருந்தார். மேலும் இது தொடர்பான பல புகைப்படங்களையும் ராகுல் வெளியிட்டிருந்தார். 

 

 Congress challenged the BJP

 

ஆனால் பாஜக மத்திய மந்திரி கிரிராஜ் சிங் அந்த புகைப்படங்கள் போலியானவை எனக் கூறியுள்ளார்., ராகுல் வெளியிட்டுள்ள போட்டோவில் அவர் கையில் பிடித்திருக்கும் கைத்தடியின் நிழல் கீழே விழவில்லை எனவே அது போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என கூறியிருந்தார். அதேபோல் பாஜக மகளிரணியின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, டெல்லி எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியின் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர் இந்நிலையில் கைலாஷ் யாத்திரையின் முழு விவரங்ககளும் போட்டோக்களும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பயண விவரத்தில் 34 கி.மீ தூரம் நடந்ததால் 4,500 கலோரிகளை ஒரே நாளில் இழந்தாக தெரிவித்துள்ள காங்கிரஸ் தரப்பு இந்த யாத்திரையில் பல வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி முன்னோக்கி நடக்கிறார் ராகுல் உங்களால் முடியுமா என சவால்விட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்