புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வருகின்றனர். அதே நேரம் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு குரல்களும் நாடு முழுவதும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் பெங்களுருவின் இந்திராநகர் பகுதியில் கராச்சி பேக்கரி என்ற பெயரில் கடை இன்று இயங்கி வந்துள்ளது. அதில் உள்ள கராச்சி என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என அந்த கடை முன் திரண்ட சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் இந்த சூழ்நிலையை சமாளிக்க அந்த கடை ஊழியர்கள் உடனடியாக கராச்சி என்ற வார்த்தை மீது பேனர் ஒன்றை வைத்து அந்த வார்த்தையை மறுத்துள்ளனர். மேலும் அந்த பெயருக்கு மேலே இந்திய தேசிய கொடியும் வைக்கப்பட்டது. இதனால் அந்த இடத்தில சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியா வந்த ஒருவரால் கடந்த 1953 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பேக்கரி பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.