தேசிய மக்கள்தொகை பதிவேடு ஏழைகள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், ராகுலின் இந்த கருத்தை கடுமையாக கண்டித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், " குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை மக்கள் முன் தவறான கோணத்தில் காங்கிரஸ் கட்சி கொண்டு செல்கிறது. ஆனால், மக்கள் மத்திய அரசுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருகிறார்கள். அதனை காங்கிரஸ் கட்சியால் குலைக்க முடியாது. ராகுலின் கருத்து முட்டாள்தனமானது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவர் எதையும் பேசுவார், அனைத்து நேரங்களிலும் பொய் பேசுவார். இப்போது அவர் நீண்ட காலம் தலைவராக நீடிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பொய் பேசுகிறார்.அவர் இந்த ஆண்டின் சிறந்த பொய்யர்" என அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பேசியுள்ள ராகுல் காந்தி, "நாட்டில் எந்த தடுப்புக்காவல் முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் ட்விட்டரில் பகிர்ந்திருந்தேன். ஆனால், அதே வீடியோவில் தடுப்பு முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன. எனவே, யார் பொய் சொல்கிறார்கள் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார்.