Published on 05/02/2019 | Edited on 05/02/2019
பிரதமர் மோடியை தனது பாட்டி இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டு பேசுவது அவமானமான செயலாகும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடியை முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒப்பிடுவது குறித்து பிரபல ஆங்கில நாழிதழ் ஒன்றுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், 'முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடுவது தேவை இல்லாதது. அது இந்திரா காந்திக்கு அவமதிப்பு ஆகும். என் பாட்டி முடிவுகளில் மக்கள் மீதான பாசம் இருந்தது. மக்களோடு மக்களாக சேர்ந்து இந்திய ஏழைகள் மீது அக்கறை காட்டினார். ஆனால் பிரதமர் மோடியின் முடிவுகள் மற்றும் திட்டங்கள் நாட்டு மக்களிடையே கோபம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி நாட்டை பிரிக்கிறது. பிரதமர் மோடிக்கு ஏழைகள் மீது எந்தவித அக்கறையும் இல்லை' என கூறினார்.