இந்தியாவின் பொருளாதாரத்தில் தேக்க நிலை உள்ளது எனவும், பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது எனவும் பல்வேறு சாராரும் கவலைப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் பொருளாதார அறிஞரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான ரகுராம் ராஜன் தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரத்தை பற்றி பேசியுள்ள அவர், "இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து பல தனியார் நிறுவனங்கள் கணித்துள்ளன. இந்த கணிப்புகள் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி கணிப்பைவிட மிகவும் குறைவாக உள்ளது.
பல்வேறு தொழில்களின் வளர்ச்சியில் நிலவும் மந்த நிலையை போக்க முக்கியமான சீர்த்திருத்தம் அவசியம். தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த நாட்களுக்குள் சலுகைகள் உள்ளிட்டவை வழங்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள தேக்க நிலையும் 2008-ம் ஆண்டு ஏற்பட்ட தேக்க நிலையும் மிகவும் வேறுபட்டது. இந்தியாவின் இந்த பொருளாதார தேக்க நிலை மிகவும் கவலையளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.