ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாகவே கெளரவர்கள் பிறந்தார்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து ஞானம் இருந்ததாகவும் பஞ்சாபில் நடந்த இந்திய அறிவியல் மாநாட்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் கூறியுள்ளார். மேலும் மகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய அவர், "காந்தாரிக்கு எப்படி நூறு குழந்தைகள் இருக்க முடியும் என அனைவரும் வியந்தார்கள். இதனை அப்பொழுது ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் முறையை நாம் கண்டறிந்துள்ளோம்.ஆனால் அன்றே மகாபாரதத்தில் இது குறித்து உள்ளது. கருத்தரித்த நூறு முட்டைகளை நூறு பானைகளில் போடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது." என பேசினார்.நூறு கெளரவர்களும் ஒரு தாயிடமிருந்து பிறந்தவர்கள். இவை சோதனை குழாய் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி மூலமே சாத்தியமானது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுதான் நம் நாட்டின் அறிவியலின் சிறப்பு என்று பேசினார்.