Skip to main content

"கிரண்பேடி துரோகம் இழைத்து வருகிறார் " -முதலமைச்சர் நாராயணசாமி

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
puducherry narayanasamy

 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


"புதுச்சேரியில் தற்போது வெளிமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் மக்களால் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்றது. புதுச்சேரியில் தற்போது அனைத்து கடைகளும்,  சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் புதுச்சேரி மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 50 பேர்கள் மட்டும் திருமணத்தில் கலந்து கொள்ளலாம். திருமண மண்டபங்களில் நடத்த அனுமதிக்கப்படும்.

 

 


அனைத்து வங்கி அதிகாரிகளையும் அழைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்தவித உத்தரவாதம் இன்றி ரூ.50 ஆயிரம் கடனுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த நான்கு ஆண்டுகளாக ஜனநாயகத்தை மதிக்காமல், விதிமுறைகளை பற்றிக்கூட கவலைப்படாமல் புதுச்சேரி மாநில மக்களுக்கு துரோகம் இழைத்து வருகிறார். எந்த புகாரையும் விசாரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையில் கிரண்பேடி ஈடுபட்டுள்ளார்''என்றார். 

 

சார்ந்த செய்திகள்