புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் 27- வது பட்டமளிப்பு விழா இன்று (23.12.2019) நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில் ஆளுநர் கிரண்பேடி, புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி, துணைவேந்தர் குர்மீத்சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின் போது கேரள மாணவி ரபியாவை அவரது தலையில் அணிந்திருந்த ஹிஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியதாகவும், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் காரணமாக மாணவி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். குடியரசுத் தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார்
இதனை தொடர்ந்து மாணவி ரபியாவிற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்ட போது மாணவி அதனை ஏற்க மறுத்ததால், விழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்ததற்கு அனுமதி மறுத்ததால் மாணவி தங்கப் பதக்கத்தை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.