Published on 20/08/2019 | Edited on 20/08/2019
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலரிடம் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி வழங்கினார். அப்போது எதிர்கட்சியை அ.தி.மு.க, பா.ஜ.க சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, தொடர்ந்து காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் சபாநாயகர் சிவக்கொழுந்து பங்கேற்கிறார். அவர் சபையை நடுநிலையாக நடத்த மாட்டார். அதனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறினார்.
சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக புதுவையில் பரபரப்பாக பேசப்படுகிறது.