Published on 20/10/2021 | Edited on 20/10/2021
சர்வதேச எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நிபுணர்களுடன் காணொளி மூலம் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் துறை ரீதியிலான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், எண்ணெய் நிறுவனங்களில் உள்ள பிரச்சனைகள், தூய்மையான செயல்திறன்மிக்க எரிசக்தி வளம் கண்டறிதல், பசுமை ஹைட்ரஜன் பொருளாதாரம் பற்றி பிரதமர் ஆலோசித்து வருவதாகத் தகவல் கூறுகின்றன.
இந்தியாவில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பிரதமரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.