Published on 21/11/2021 | Edited on 21/11/2021

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக வடகிழக்கு பருவமழை பொழிந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. புதுச்சேரியில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 10 சென்டிமீட்டர், நந்தியாறு அவளூர்பேட்டை -9 சென்டிமீட்டர், வேப்பந்தட்டை, காட்பாடியில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. லால்குடி, செந்துறையில் தலா 7 சென்டிமீட்டர், மஞ்சளாறு, வேலூரில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது ஒரு பக்கமிருக்க, புதுச்சேரியில் கனமழை காரணமாகக் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கத்தரிக்காய் கிலோ ஒன்றுக்கு 140 ரூபாய்க்கும், தக்காளி கிலோ 100 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80 ரூபாய்க்கும், புடலங்காய் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.