2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 9 ஆம் தேதி தாக்கல் செய்தார்.
நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 11 அன்று மாநிலங்களவையில் இந்த மசோதாவை அமித்ஷா அறிமுகம் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையில் இந்த மசோதா மீது காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியில் மசோதா மீதான வாக்கெடுப்பின் போது, மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 105 வாக்குகளும் கிடைத்தன. இரு அவைகளிலும் மசோதா வெற்றிபெற்ற நிலையில், நேற்று நள்ளிரவு இந்த சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.