Published on 12/11/2018 | Edited on 12/11/2018

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட ஓட்டுப்பதிவு 18 தொகுதிகளில் இன்று காலை துவங்கியுள்ளது.
மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் முதல் கட்ட தேர்தல் 18 தொகுதிகளில் இன்று தொடங்கியுள்ளது. அதில் பத்து தொகுதிகளில் காலை 7 மணிக்கும், நக்ஸல்கள் அச்சுறுத்தல் இருக்கும் மீதமுள்ள 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த தேர்தல் மாலை 5 மணி வரையில் ஒட்டுப்பதிவு நடைபெற உள்ளது.