நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று, வருகிற ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு, காங்கிரஸ், பா.ஜ.க, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “இந்தியா கூட்டணியும், அகிலேஷ் யாதவும் இங்கு வெற்றி பெறுவார்கள். அதை எழுத்துப்பூர்வமாகத் எழுதித் தருகிறேன், உத்தரபிரதேசத்தில் இந்தியாக் கூட்டணியின் புயல் வீசுகிறது. நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாகத் எழுதித் தருகிறேன் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது. இது உத்தரபிரதேசத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த போகிறது. இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடி அதானி மற்றும் அம்பானியின் பெயரைக் குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான உரைகளை நிகழ்த்தினார். ஆனால் அப்போது அவர் அவர்களின் பெயரை எடுக்கவில்லை. யாரோ ஒருவர்பயப்படுகிறார். அதனால் தான் அவரை காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் நபர்களின் பெயரை அவர் எடுத்துக்கொள்கிறார். அதனால் நரேந்திர மோடி தனது இரண்டு நண்பர்களின் பெயர்களை எடுத்துக் கொண்டார். பிரதமர், என்னைக் காப்பாற்றுங்கள். இந்தியா கூட்டணி என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டது. அதானி - அம்பானி ஆகிய இருவரும் என்னைக் காப்பாற்றுங்கள்” என்றார். இனி பாஜகவும், மோடியும், அமித்ஷாவும் மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பார்கள். அதவது உங்கள் கவனத்தை அடுத்த 10-15 நாட்களுக்கு அவர்கள் திசை திருப்ப முயற்சிப்பார்கள். பொதுத் தேர்தலில் ஒன்று மட்டுமே பேசு பொருளாக உள்ளது. அது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
மோடி 22 பேருக்கு வேலை செய்கிறார். அந்த 22 பேரிடம் 70 கோடி பேர் வைத்திருக்கும் பணத்துக்கு இணையான பணம் உள்ளது. இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. அவரால் (பிரதமர் மோடி) 22 கோடீஸ்வரர்களை அதிபதிகளை தயார் செய்ய முடியும் என்றால், நாம் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை தயார் செய்ய முடியும். ஏழைக் குடும்பங்களில் இருந்து ஒவ்வொரு பெண்ணின் பெயரும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ. 8500 டெபாசிட் செய்யப்படும்” எனப் பேசினார்.