![President presents National Writer's Award to 44 people](http://image.nakkheeran.in/cdn/farfuture/CQuoGUK4qgTqWXS18tAWrTFzF8nwr7gBXuizV_Jxj9s/1630821356/sites/default/files/inline-images/PRESIDENT555%20%281%29.jpg)
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 15- ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரை கவுரவிக்கும் வகையில் தேசிய நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேர் உள்பட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, காணொளி மூலம் நடைபெற்ற விழாவில் 44 ஆசிரியர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், நல்லாசிரியர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஆகியோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டம், பிராட்டியூர் ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் தலைமை ஆசிரியை லலிதா ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்றனர்.