மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் போபால் தொகுதியில் பாஜக கட்சியின் சார்பாக பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிடுகிறார்.
2006-ம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில் பாஜக சார்பில் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மாடுகள் பல இடங்களில் நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமளிக்கும் வகையில் உள்ளது. உண்மையில் மாடுகள் மற்றும் மாடு சார்ந்த தயாரிப்புகளில் மனிதனுக்கு நிறைய நன்மைகள் உள்ளன. அதில் பெரிய விஷயம் என்னவென்றால், மாட்டின் சிறுநீரை அருந்தியதின் மூலம் தான் எனக்கு வந்த புற்றுநோய் குணமானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நான் மாட்டு சிறுநீரை அருந்தியதன் மூலம் என் புற்றுநோயை நானே குணப்படுத்திக் கொண்டேன்" என தெரிவித்தார்.