Skip to main content

பயிற்சி மருத்துவர் கொலை எதிரொலி ; நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

Published on 17/08/2024 | Edited on 17/08/2024
nn

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 8வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொல்கத்தாவில் பயிற்சி மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இன்று காலை 6:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நோயாளிகளுக்கு பாதிப்பின்றி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட தமிழக மருத்துவத்துறை போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்