உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் குறிப்பாக மராட்டியத்தில் கரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. அங்குள்ள தாராவி பகுதி கரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்தது. சுமார் 2.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தப் பகுதியில் 8 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அந்தப் பகுதியில் முதல் கரோனா பாதிப்பு தொடங்கிய நிலையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக பாதிப்புகள் உச்சத்தில் இருந்து வந்துள்ளது. தற்போது பாதிப்புகள் சற்று குறைய தொடங்கி உள்ளது. இன்று 2 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,311 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை 86 பேர் உயிரிழந்துள்ளனர்.