கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து, அங்கு புதிய முதல்வராக யார் பதவியேற்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.
பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இவ்விவகாரம் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான மகராஷ்டிரவதி கோம்ண்டக் கட்சி (MGP) சட்டமன்ற உறுப்பினரான சுதின் தவாலிகர், முதலமைச்சராக முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆனால் பாஜக தலைமை, பாஜக கட்சியிலிருந்து ஒருவரை முதல்வராக கொண்டு வர வேண்டும் என முயற்சி செய்கிறது.
டெல்லியில் இருந்த வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக கூட்டணி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இந்த சமாதானப் பேச்சு இன்று அதிகாலை 4 மணி வரை நீடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜக வுக்கு பெரும்பான்மை இல்லை என கூறிவந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கோவா தலைவர் சந்திரகாந்த் காவேல்கர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று இரவு அவரின் இல்லத்தில் சந்தித்து அடுத்த கட்டநடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.