Skip to main content

பிரியங்கா காந்தியிடம் அத்துமீறல் -உ.பி காவல்துறை வருத்தம்!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020
kl;

 

 

ஹத்ராஸில் கொல்லப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் குழு நேற்று முன்தினம் அங்கு சென்றது. ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் குழுவினர் அங்கு செல்ல முயன்ற நிலையில் 5 பேர் மட்டுமே ஹத்ராஸுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என உத்தரபிரதேச போலீசார் ராகுல் மற்றும் பிரியங்காவிடம் கடுமை காட்டினர்.

 

இந்நிலையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திப்பதற்கு முன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி அகிய இருவரும் உ.பி. காவல்துறையின் பல்வேறு நெருக்கடிக்கு ஆளானார்கள். உச்சகட்டமாக பிரியங்கா அணிந்திருந்த குர்தாவை பிடித்து ஆண் காவலர் ஒருவர் இழுத்த சம்பவமும் நடைபெற்றது. இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து கண்டனங்கள் குவிந்து வந்த நிலையில், உ.பி காவல்துறை நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்