ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் எவரும் இனி 15 கிலோவிற்கு அதிகமான எடை கொண்ட பேக்கை கொண்டுவரக்கூடாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

எந்தவொரு நிறுவனமும் உள்நாட்டு பயணத்தின் போது கொண்டுவரப்படும் பேக் மற்றும் லக்கேஜ்களுக்கு இந்த மாதிரியான கட்டுபாடுகளை இதுவரை விதித்ததில்லை. ஆனால் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
இதுபற்றி ஜெட் ஏர்வேஸ் தனது ஏஜெண்டுகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்நாட்டு பயணம் செய்யும் பயணிகள் இனி பயணத்தின் பொழுது ஒரு பையைத்தான் உடன் கொண்டுவரவேண்டும். அந்த பையும் 15 கிலோவிற்கும் குறைவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. எனினும் ஜூன் 15-ஆம் தேதிக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த புதிய விதி பொருந்தாது. அதேபோல் பிரீமியம் கார்ட் கொண்ட வாடிக்கையாளர்கள் தலா, 15 கிலோ எடைகொண்ட இரண்டு பைகளை கொண்டு செல்லலாம் என கூறியுள்ளது. விமான பயணத்தின் போது கையுடன் வைத்திருக்கும் கைப்பையும் 7 கிலோ எடைக்குள்தான் இருக்கவேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளது.