Published on 19/12/2019 | Edited on 19/12/2019
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வல்லுறவு செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய 4 குற்றவாளிகளை சைபராபாத் போலிஸ் தப்பி சென்றதாக கூறி குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்து கொன்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருந்தலும் இதுகுறித்த விசாரணையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்தி வருகிறது.
விசாரணை நடைபெற்று வருவதால் அவர்கள் நால்வரின் உடலும் நீதிமன்ற உத்தரவு படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த என்கவுண்ட்டரில் ஈடுபட்ட சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தன்னுடைய குலதெய்வமான அக்னி கோயிலுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்துள்ளார். இதை தொடர்ந்து மாநிலத்தில் உள்ள பிற கோயில்களுக்கும் சென்று அவர் வழிபாடு நடத்தி வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.