இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி முதல் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரக்திற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனவரி 6ஆம் தேதி இந்தப் பயணம் தொடங்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பயணத்தின்போது இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இருநாட்டு தலைவர்களும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தைப் பிரதமர் வெளியிடுவதற்கு வசதியாக, அவர் அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்பு ஒப்பந்தம் மீதான முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் அலுவலகம் விரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஸ்ரீநகரிலிருந்து தங்கள் நாட்டின் வழியாக விமானங்களை அனுமதிக்க பாகிஸ்தான் மறுத்துவரும் நிலையில், அதற்குப் பதிலடியாக என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடியும், ஐக்கிய அரபு அமீரக தலைவர்களும் விவாதிக்கவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள்
மேலும் பிரதமர் மோடி, துபாய் எக்ஸ்போவையும் பார்வையிட உள்ளதாக அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.