Published on 13/10/2018 | Edited on 13/10/2018
பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு பயணமாக ஜப்பான் செல்ல உள்ளார். வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்ளும் மோடி, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இது பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பங்கேற்கும் 5-வது வருடாந்திர உச்சி மாநாடு ஆகும்.
இந்த மாநாட்டில் இந்திய - பசிபிக் பிராந்திய நிலவரம் உட்பட பல்வேறு பிராந்திய, சர்வதேச விவகாரங்களை பற்றி இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். மேலும், இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியா-ஜப்பான் இடையிலான பாரம்பரிய நட்புறவை பிரதமர் மோடியின் பயணம் உறுதி செய்யும்” என்று கூறப்பட்டுள்ளது.