சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அனுமதி அளித்தது. இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. இத்தீர்ப்பால் ஐயப்பனின் புனிதம் கெட்டுவிடும் என்று இந்து அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் தெரிவித்து வந்தனர். கேரள அரசாங்கத்தையும் இத்தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பந்தள அரச குடும்பம் கோரிக்கை வைத்தது. ஆனால், கேரளாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசு,” இது எங்களுடைய வேலை இல்லை, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அதன் வழி நடப்பதுதான் எங்களின் வேலை” என்றது.
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து இதுவரை 19 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டும் கடந்த 19ஆம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்தது. இந்த மனுக்களை எல்லாம் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்த மனுக்களின் விசாரணை எப்போது தொடங்கும் என்பதை இன்று உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மறுசீராய்வு மனுக்களின் விசாரணை நவம்பர் 13 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.