Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!! 

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
petrol price

 

 

 

ஈரானிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய் பெற அமெரிக்கா தடை விதித்தது. இதனால், ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் சுமார் 40% முடங்கியுள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது. இதேபோன்று, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நடந்து வரும் வர்த்தக போரும் சர்வதேச சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.
 

 

 

இந்நிலையில், டீசல் விலை இதுவரை இல்லாத விலை உயர்வை சந்தித்து வருகிறது. நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல்  லிட்டருக்கு ரூ.73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாகவும் உள்ளது.  

சார்ந்த செய்திகள்