இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் (04.11.2021) தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீபாவளியையொட்டி சரயு நதிக்கரையில் எண்ணெய்யைக் கொண்டு ஒன்பது லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.
இது, அதிக அளவிலான எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டதற்கான கின்னஸ் சாதனையையும் படைத்தது. ஆனால் இந்த கின்னஸ் சாதனை, உத்தரப்பிரதேசத்தில் நிலவும் அவலத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்கள், சரயு நதிக்கரையில் ஏற்றப்பட்ட விளக்குகளில் எஞ்சிய எண்ணெய்யை தங்களது பயன்பாட்டிற்காக எடுத்துச் சென்றுள்ளனர். பெரும்பாலும் ஏழை மக்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
Another aspect of Ayodhya’s #Deepotsav. late night visuals of people, mostly the poor,collecting residual oil from the earthen lamps at Ram Ki Paidi where 9 lakh + diyas were lit .Not the first time this has happened , seen similar scenes all 5 yrs, but striking nevertheless …. pic.twitter.com/FVlBqOsJmz
— Alok Pandey (@alok_pandey) November 4, 2021
இதுதொடர்பான வீடியோவை, ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கடந்த ஐந்து வருடமாக இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.