![OWAISI](http://image.nakkheeran.in/cdn/farfuture/nJ6Bg6x6y-qFxx8gkxrRENx6cuT4Fi6aK_XhLjlS0Sg/1643892718/sites/default/files/inline-images/5y46.jpg)
உத்தரப்பிரதேச மாநிலத்தில், இம்மாதம் 10 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திரும்பிய அசாதுதீன் ஒவைசி, தனது கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் கிதாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் டெல்லி செல்லும் வழியில், சஜர்சி சுங்க சாவடி அருகே இரண்டு பேர் தனது வாகனத்தை நோக்கி 3-4 ரவுண்டுகள் சுட்டதாகவும், தனது வாகனம் பஞ்சர் ஆகி விட்டதாகவும், இதனையடுத்து வேறு வாகனத்தில் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தன் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குழுவில் மூன்று-நான்கு பேர் இருந்ததாகவும் ஒவைசி தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தன் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஒவைசி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.