
இன்று காலை மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது. தற்போது அதற்கு அவசரச்சட்டம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு அவசரச்சட்டம் கொண்டுவர ஒப்புதல். முத்தலாக் தடை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்து அவசரச்சட்டமாக வெளியிட ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இதற்கு எதிராக மக்களவை உறுப்பினர் அசாவுதின் ஒவைஸி, “ நான் பிரதமர் மோடியை வலியுறுத்துகிறேன். இந்த இந்தியாவில் திருமணமாகி கைவிடப்பட்ட பெண்களுக்கு என்று ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும், அது போன்று 24 லட்சம் பேர் இங்கு இருக்கிறார்கள். திருமணம் மட்டும் செய்ட்துவிட்டு, அவர்களை பிரிந்து வாழ்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆவணத்தில் மட்டும் அவர்கள் பெயரை சேர்க்கிறார்கள்” என்று முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிராக கூறியுள்ளார்.
மேலும் அவர், ”இது இசுலாமிய பெண்களுக்கு எதிராக இருக்கின்றது. இந்த அவசரச்சட்டத்தால் இசுலாமிய பெண்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இசுலாத்தில் திருமணம் என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று, அதில் தவறுகள் இருந்தால் தண்டனை வழங்க வேண்டும். இந்த மசோதா கட்டமைக்கப்படாத ஒன்று. இது இசுலாமிய பெண்களின் சம உறிமைக்கு எதிரானது. இசுலாமிய பெண்கள் சங்கமும், பெண்கள் சங்கமும் இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் போராடும்” என்றார்.