Skip to main content

மீண்டும் தரம் குறித்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் ‘மேகி’!

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
மீண்டும் தரம் குறித்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் ‘மேகி’! 

நெஸ்ட்லே நிறுவனத்தின் பிரபல உணவுப் பண்டமான மேகி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.



நெஸ்ட்லே நிறுவனம் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதன் முக்கிய தயாரிப்பான மேகி-யில் அளவுக்கு அதிகமான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடை செய்யப்பட்டது. பின்னர் நடைபெற்ற தர ஆய்வுகளை அடுத்து, அதே ஆண்டு நவம்பர் மாதம் மேகி மீதான தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூர் எனும் பகுதியில் மேகி மீதான தர ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சுவையை அதிகரிப்பதற்காக அளவுக்கு அதிகமான இரசாயனங்கள் கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேகி நிறுவனத்திற்கு ரூ.45 லட்சமும், விநியோகஸ்தர்களுக்கு ரூ.26 லட்சமும் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. அப்படி கிடைத்தால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என நெஸ்ட்லே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்