இங்கிலாந்தில் பரவிவந்த மரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொங்கியுள்ளது. ஏற்கனவே இத்தாலி, ஃப்ரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் புதியவகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 25 பேருக்கு புதியவகை கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 13 பேருக்கு புதியவகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், "புதியவகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறையில் சிகிச்சையளிக்கப்டுகிறது. மேலும், அவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், சக பயணிகள் உள்ளிட்டோரை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது" என அறிவித்துள்ளது.