மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசும் போது ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தப் படி கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்துவிட்டதா? என கேள்வி எழுப்பினார். இதற்கு அங்கிருந்த மக்கள் ஆமாம் ஆமாம் என கூறினார்கள். இதனால் மத்தியமைச்சர் அவமானப்பட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். மேலும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி ஆட்சிக்கு வந்த மூன்று நாட்களிலேயே விவசாயிகள் வங்கியிடம் பெற்ற அனைத்து கடன்களையும் ரத்து செய்யும் கோப்பில் அம்மாநில முதல்வர் கமல் நாத் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அறியாமல் மக்களிடம் மத்திய அமைச்சர் கேள்வி எழுப்பி இருப்பது என்பது காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சாதகமாகி உள்ளது. அதே போல் அமைச்சர் மக்களிடம் கேள்வி எழுப்பியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலிடம் தோற்றார். தற்போது பாஜக சார்பில் அமேதி மக்களவை தொகுதியில் அமைச்சர் ஸ்மிருதி மீண்டும் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.