Skip to main content

'13 ஆம் எண்... சாத்தானிய வழிபாடு'- கேட்டாலே திகில் பற்றும் மர்மம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'Number 13...Satanic Worship'-Mystery in Kerala

மாந்திரீகம், நரபலி என மர்மங்களுக்கு பெயர் போனது கேரளா. அண்மையாகவே கேரளாவில் நரபலி கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் மர்மமான நிகழ்வு ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரளாவில் 'சாத்தான் மதம்' என்ற ஒரு மதம் வளருவதாகவும், பெரும் பணக்கார புள்ளிகள்கூட அந்த மதத்தில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி, மகள், உறவினர் ஆகிய நான்கு பேர் சடலமாக கிடந்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலையை நிகழ்த்தியது யார் என்ற தொடர் விசாரணையில் இந்த தம்பதியின் மகனான கேடல் என்பவர்தான் அந்த கொலைகளை செய்தது தெரியவந்தது. கோடாரியை பயன்படுத்தி தங்களது குடும்ப உறுப்பினர்களை கேடல் கொலை செய்துள்ளார். இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாத்தானிய வழிபாடு தான் இதற்கெல்லாம் காரணம் என்பது கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்தில் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த நவீன் தாமஸ், தேவி என்ற ஆயுர்வேத மருத்துவர்கள், ஆர்யா நாயர் என்ற ஆசிரியை ஆகிய மூவரும் ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

உயிர்த்தெழுந்த பிறகு வேறு ஒரு கிரகத்தில் வாழ வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் நம்பியதாகவும், சாத்தான் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்ததும் தெரியவந்தது. எதிரிகளை பழிவாங்க, பணம் சொத்துக்களை பெற கேரளாவில் சாத்தானிய வழிபாடுகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு நகரங்களில் அதிகமானோர் சாத்தானிய வழிபாடுகளை பின்பற்றுவது தெரியவந்துள்ளது. மக்கள் அதிகம் நடமாடாத பகுதிகளில் இருக்கும் தனி வீடுகளில் கூடி தங்களது மதத்தை வளர்த்து வருவதாகவும், இந்த சாத்தான் வழிபாடு செய்பவருக்கு 13 ஆம் எண் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்