நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை இன்று (31/08/2020) அறிவிக்கப்படுகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மாஸ்க் மற்றும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் இருந்ததையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளின் செயல்பாடு பற்றியும் ட்விட்டரில் பிரசாந்த் பூஷண் விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்தனர். இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று (31/08/2020) தீர்ப்பு அறிவிக்கவுள்ளது. இதில் பிரசாந்த் பூஷணுக்கு ஆறு மாதம் சிறை அல்லது ரூபாய் இரண்டாயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நீதிமன்றம் இரண்டு முறை அவகாசம் தந்தும் மன்னிப்பு கேட்க மறுத்து தனது நிலைப்பாட்டில் பிரசாந்த் பூஷண் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.