ஆடை அணிவது எப்படி அடிப்படை உரிமையோ அதைப்போல ஆடை அணியாமல் இருப்பதும் கூட அடிப்படை உரிமையாக இருக்குமே என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் கர்நாடகாவில் கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்தது தொடர்பாக சர்ச்சைக்கள் எழுந்தது. இதன் காரணமாக கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்த நிலையில் இது தொடர்பாக வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது 'ஆடை அணிவது எப்படி அடிப்படை உரிமை எனில் ஆடை அணியாமல் இருப்பதும் கூட அடிப்படை உரிமையாக இருக்குமே. நாம் நம் நாட்டை ஏன் அமெரிக்கா, கனடாவுடன் ஒப்பிட வேண்டும்? நாம் புராதனமானவர்கள். நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் பொழுது அது சமூக காலாச்சர சூழல்களைச் சார்ந்தது' என கருத்து தெரிவித்துள்ளார்.