Published on 06/04/2018 | Edited on 06/04/2018
பா.ஜ.க மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு எதிர்கட்சிகளுடன் ஆதரவு திரட்டிவர, மறுபக்கம் தெலுங்கு தேச எம்பிகளும் பல்வேறு முறைகளில் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டுமென்று மக்களவையில் வலியுறுத்தி வருகின்றனர்.

அப்படியிருக்க சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தி தெலுங்கு தேச எம்பி நரமல்லி சிவபிரசாத் இன்று விஸ்வமித்திரர் வேடமிட்டு மக்களவைக்கு வந்துள்ளார், இவர் ஏற்கனவே பெண், நாரதர், ராமன், பள்ளி மாணவன் போன்ற பல வேடங்களிட்டு மக்களவையில் கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிட்டத்தக்கது.