மிசோரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் 3.53 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், இதில் 2.66 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10.41 லட்சமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது வரை 66 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நோய்த் தொற்றிலிருந்து இதுவரை 55 லட்சம் பேர் மீண்டுள்ளனர். இதில், கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மிசோரம் மாநிலத்தில் இதுவரை 2,120 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 1,807 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், மிசோரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.