நிர்பயா குற்றவாளிகள் அக்சய் குமார்சிங், வினய்சர்மா, பவுன்குப்தா, முகேஷ்சிங் ஆகிய 4 பேரையும் வருகிற 22 ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 பேரையும் தூக்கிலிட இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்கு முந்தைய நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதன் ஒரு பகுதியாக திகார் சிறையில் தூக்கில் இடுவதற்கான ஒத்திகை நேற்று நடைபெற்றது.
![vinay sharma](http://image.nakkheeran.in/cdn/farfuture/fAia1ch_smcDoipRvSDaudRg9CwxHWCTYyb5FF36Qfs/1578552523/sites/default/files/inline-images/vinay-sharma.jpg)
4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் தயார் செய்யப்பட்டு விட்டது. தூக்கில் தொங்க விடுவதற்கான இடம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கயிறு, முகமூடிகளும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே 4 குற்றவாளிகளும் டெல்லி திகார் ஜெயிலில் தனித்தனி அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு காலை-மாலை இரு நேரமும் டாக்டர்கள் மூலம் உடல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது
இந்நிலையில், தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை குற்றவாளி வினய் சர்மா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.