Skip to main content

நீரவ் மோடியின் பங்களாவை இடித்து தள்ளும் மகாராஷ்ட்ரா அரசு...

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

gchjghg

 

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவைவிட்டு வெளியேறினர். இங்கிலாந்தில் மறைந்திருக்கும் இவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் ராய்காட் நகரில் அலிபாக் பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் பங்களாவை அம்மாநில அரசு வரும் வெள்ளிக்கிழமை இடிக்கவுள்ளது. 33,000 ச.அடி பரப்பளவு உள்ள அந்த பங்களா 100 கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அந்த இடத்தில் அது கட்டப்பட்டுள்ளதால் அதனை இடிக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்