தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலால் கனமழை கேரளாவின் பல பகுதிகளில் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, நாளை புயலாக மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய புயலால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம் மற்றும் கன்னூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் ஏற்கனவே மழை தொடங்கியுள்ள நிலையில், இது மேலும் வலுப்பெறும் எனக் கூறப்படுகிறது.