இந்தியாவை பொறுத்தவரையில் ஹாட் ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் ஆகிய இரண்டு வீடியோ வலைதளங்கள்தான் அதிகமாக உபயோகப் படுத்தப்படுகின்றன. ஆனால், உலக அளவில் 'நெட்ஃப்லிக்ஸ்'தான் அதிகமாக (15%) உபயோகிக்கப்படுகின்றன என்று சான்ட்வைன் குளோபல் இன்டர்நெட் ஃபினாமினா ரிப்போர்ட் (Sandvine's global internet phenomena report) தெரிவித்துள்ளது. சந்தா விலைதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் அதற்கு அடுத்தபடியாகத்தான் தொலைக்காட்சியில் இருந்து ஆன்லைனுக்கு மாற மனமில்லாதது என்றும் அந்த ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் 'ஸ்டேட் ஆஃப் ஆன்லைன் வீடியோ 2018' அறிக்கையின்படி இந்தியாவில் அதிகமாக விளையாட்டு சம்மந்தமான நேரலைகளை பார்ப்பதில்தான் 80% பேர் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக இந்தியர்கள் 8 மணி நேரம் 28 நிமிடங்கள் ஆன்லைனில் வீடியோ பார்ப்பதில் மட்டுமே செலவிடுகிறார்கள். இது இவர்கள் தொலைக்காட்சியில் செலவிடும் நேரத்தைவிடவும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு ஆய்வில், உலக அளவிலே சராசரியாக ஆன்லைனில் செலவிடும் நேரம் 6 மணிநேரம் 45 நிடங்கள் என்றும் இது இந்தியர்கள் செலவிடும் நேரத்தைவிடவும் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.