![paddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/BWVQe5YPzi3-056AfuFWP-b7opNjwpt9n3VPfTw25Lg/1654687183/sites/default/files/inline-images/t2_19.jpg)
நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் நெல் ஒரு குவிண்டால் ரூபாய் 2040 க்கு வாங்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார். நெல் மட்டுமல்லாது சோளம், பருப்பு வகையில் உள்ளிட்ட காரிப் பருவ பயிர்களான 14 பயிர்களின் கொள்முதல் விலையும் அதிகரித்துள்ளது. அறிவிப்பின்படி நெல் குவிண்டாலுக்கு 100 ரூபாயும், உளுந்துக்கு 300 ரூபாயும், துவரம் பருப்புக்கு 300 ரூபாயும், பாசிப்பருப்புக்கு 480 ரூபாயும் உயர்த்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்துள்ளார்.