Skip to main content

நேபாள நாட்டு விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு!

Published on 29/05/2022 | Edited on 29/05/2022

 

நேபாள நாட்டு அரசின் பொதுத்துறை நிறுவனம் தாரா ஏர்லைன்ஸ். இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், இன்று (29/05/2022) காலை 09.55 மணிக்கு பொக்காராவில் இருந்து புறப்பட்டு, ஜோம்சோமுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும் மூன்று ஜப்பானியர்கள், விமான பணியாளர்கள் என மொத்தம் 22 பேர் பயணம் செய்தனர்.

 

விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியது. இதையடுத்து, மாயமான விமானத்தைத் தேடும் பணியை நேபாள நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதேபோல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் நேபாள நாட்டு அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாயமான விமானம் கடைசியாக, தவுலகிரி மலைப்பகுதியில் காணப்பட்டதாகவும், அங்கு தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விமானம் விழுந்த இடம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேபாளத்தின் மஸ்டாங் மாவட்டத்தின் கோவாங் கிராமத்தில் விமானம் விழுந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் விமானத்தின் நிலை குறித்து இன்னும் தகவல்  தெரியவில்லை என திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.

 

 

 

Next Story

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Nepal earthquake lost life toll rises to 128

 

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.