இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நிகழ்த்தியது. இதில் 250- க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை கூறி இருந்தது.

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை (NATIONAL INVESTIGATION AGENCY- "NIA" அதிகாரிகள் கோவை, நாகை, தஞ்சை, மதுரை, பெரம்பலூர், தேனி, திருவாரூர் என பல இடங்களில் சோதனை மேற்கொண்டு பலரை 16 பேரை கைது செய்தனர்.பின்னர் கைதானவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் எடுத்தது விசாரித்தனர்.

இந்த நிலையில் காஷ்மீரின் வடக்கே பாராமுல்லா மாவட்டத்தில் நான்கு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன் இந்த சோதனை நடந்து வருகிறது.